BREAKING : விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இரண்டு கதாநாயகிகள்! விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 03, 2019 03:42 PM
வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா இணைந்து இயக்கும் 4 குறும்படங்களின் சங்கமமான அந்தாலஜி வகையில் உருவாக இருக்கும் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் கதையில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கின்றனர்.

பாலிவுட்டில் கடந்த வருடம் முன்னணி இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், கரன் ஜோகர், திபாகர் ஜானர்ஜி ஆகியோர் நெட்ஃபிளிக்ஸிற்காக லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தை இயக்கியிருந்தனர்.
ஒரே கருத்தை வலியுறுத்தும் 4 குறும்படங்களின் சங்கமமான அந்தாலஜி (Anthology) வகையில் உருவாகும் இதனை 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர்.
இதனைப் போல தமிழிலும் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா உள்ளிட்ட இயக்குநர்கள் இணைந்து ஆந்தாலஜி வைகப்படம் ஒன்றை நெட்ஃபிளிக்ஸிற்காக இயக்க உள்ளனர் என்பதை முன்பே அறிவித்திருந்தோம் இந்நிலையில் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள பாகத்தில் கள்கி கோய்ச்லின் மற்றும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது என்று நமக்கு தகவல் கிடைத்துள்ளது.