பிரபல நடிகையின் 8 மாத மகன்...கொழுக்கு மொழுக்கு குழந்தைக்கு அவ்வளவு பேன்ஸ்.. யாருனு தெரியுதா..?
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்தவர் நடிகை எமி ஜாக்சன். இவர் முதன்முதலில் நடிகர் ஆர்யாவுடன் 'மதராசபட்டினம்' என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்பு ஹிந்தியில் சில படங்களிலும், தமிழில் தாண்டவம், தங்கமகன், கெத்து, 2.0 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமை இவரைச் சேரும்.

இந்நிலையில் நடிகை எமிஜாக்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். பின்பு இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் காதலுக்கு சாட்சியாக செப்டம்பர் மாதம் 2019-ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆன்ட்ரிஸ் என்று பெயரிட்டனர். இந்நிலையில் செல்ல குழந்தையுடன் எமிஜாக்சன் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் வைரல் ஆகின்றன. குழந்தைக்கு இப்பொழுது பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எமி ஜாக்சனின் குழந்தைக்கு தற்போது 8 மாதம் இந்த புகைப்படம் வெளியிட்டு அவர் கூறியுள்ளார்.