Breaking: 'பிக்பாஸ் 3' ஸ்டார் ஹீரோவாக நடிக்கும் படம்... அனிருத் இசை.... வேற லெவல் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. காதல், நட்பு, சண்டை என நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை சுவாரஸியப்படுத்தியது.

Anirudh to compose music for Bigg Boss 3 fame Tharshan's movie | பிக்பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு அனிருத் இசை

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் மாபெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. ஏற்கனவே 'நட்புனா என்னனு தெரியுமா ?' நடித்திருந்த நடிகர் கவின் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 'பிகில்' பட நடிகை அம்ரிதா நடித்திருந்தார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா, ஆக்சன் கிங் அர்ஜூன், ஹர்பஜன் சிங் இணைந்து நடிக்கும் 'ஃபிரெண்ட்ஷிப்' படத்திலும், ஆரி அர்ஜூனா ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை சாக்ஷி அகர்வால் ஆர்யாவுடன் 'டெடி', ஜி.வி.பிரகாஷூடன் 'ஆயிரம் ஜென்மங்கள்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் தனது இயல்பான நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இதனையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் படி தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்க, அனிருத் அந்த படத்துக்கு இசையமைக்கிறாராம். இந்த படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக கருணாமூர்த்தி தயாரிக்கிறார். இந்த படம் கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறவிருக்கிறது.

Entertainment sub editor