விஜயின் "தளபதி 64" இசை குறித்து முதன்முறையாக பேசிய அனிருத்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 26, 2019 10:43 AM
விஜய் நடிப்பில் தற்போது ‘பிகில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. அட்லீ இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை அடுத்து ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்கள்.
தளபதி 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஏப்ரம் 2020ல் படத்தை வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
இப்படம் குறித்து பேசிய இசையமைப்பாளர் அனிருத் . தளபதி படம் கமிட்டானது மகிழ்ச்சி, படத்தின் வேலைகளில் ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய பெஸ்ட்டை கண்டிப்பாக கொடுப்பேன் என சந்தோஷமாக பேசியுள்ளார்.
விஜயின் "தளபதி 64" இசை குறித்து முதன்முறையாக பேசிய அனிருத்! வீடியோ