பிரபல நடிகை தற்கொலை... விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ... தலைமறைவான காதலர் அதிரடி கைது...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சின்னத்திரை நடிகை ஒருவர் கையில் விஷ பாட்டிலுடன் செல்பி வீடியோ எடுத்து கொண்டே விஷத்தை குடித்து, மரணமடைந்த செய்தி மக்களை உலுக்கியது.

பிரபல சீரியல் நடிகை தற்கொலை காதலர் கைதுPopular serial actress suicide case Boyfriend got arrested

இந்நிலையில் அவர் பிரபல கன்னட சீரியல் நடிகை சந்தனா என்ற தகவல் வெளியானது. அவர் தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றி வந்திருக்கின்றனர். ஆனால் திருமண பேச்சை எடுத்த பொழுதோ தினேஷ் வேண்டாம் என்று மறுத்துள்ளார். மேலும் தினேஷின் குடும்பத்தினரும் சந்தனாவின் ஒழுக்கத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மிகவும் பரபரப்பான இந்த வழக்கில் இத்தனை நாட்கள் தலைமறைவாக இருந்த காதலர் தினேஷ், தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர். மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று தெரிகிறது.

பிரபல சீரியல் நடிகை தற்கொலை காதலர் கைதுPopular serial actress suicide case Boyfriend got arrested

People looking for online information on Sandhana, Serial Actress, Suicide will find this news story useful.