அனிருத்தின் அம்மாவை பார்த்திருக்கீங்களா?... முழு குடும்பத்துடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறார் அனிருத். 1990ஆம் ஆண்டு பிறந்த அவர் முன்னாள் நடிகர் ரவி ராகவேந்திராவின் மகனாவார். குறுகிய காலகட்டத்திலேயே இரண்டு பிலிம்பேர் விருதுகள், 9 SIIMA விருதுகள், 6 எடிசன் விருதுகள் மற்றும் 5 விஜய் விருதுகளை பெற்றுள்ளார்.

அனிருத்தின் அம்மாவை பார்த்திருக்கீங்களா?... முழு குடும்பத்துடன் அவர் எடுத்த போட்டோanirudh family photo

2012 ஆம் வருடம் வெளியான 3 படம் தான் அனிருத் இசையமைத்த முதல் படம் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் அவர் இசையமைத்த "வை திஸ் கொலவெறி டீ" பாடல் உலகமெங்கிலும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அவரை இசையமைத்து விட்டார். இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தின் மூலம் உலக நாயகன் கமலுக்கும் இசையமைக்க உள்ளார்.

இப்படி தமிழ் சினிமாவிற்குள் அதிரடியாக நாளுக்கு நாள் பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் அனிருத்தின் குடுப்பத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் அவரது முழு குடும்பத்தினருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Tags : Anirudh

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

அனிருத்தின் அம்மாவை பார்த்திருக்கீங்களா?... முழு குடும்பத்துடன் அவர் எடுத்த போட்டோanirudh family photo

People looking for online information on Anirudh will find this news story useful.