''இனிமே எவனாவது...'' விஷாலின் ஆவேச ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் தற்போது 'அயோக்யா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார்.

Vishal Tweets about his Ayogya Movie and this social issue

சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்க, கார்த்திக் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விஷாலுடன் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து அனிருத் பாடிய கண்ணே கண்ணே என்ற வீடியோ சாங் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்ககத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'இந்த படத்தில் எல்லா பணிகளையும் முடித்துவிட்டேன்.

நன்றி என்னுடைய கோபத்தை திரையில் காட்ட உதவியதற்கு நன்றி மோகன்.  இனிமே எவனாவது ஒரு பெண்ணை நாசம் பண்ணனும்னு நினச்சா... தூக்கு தண்டன தானு பயப்படனும்' என்று தெரிவித்துள்ளார்.