விஜய்யின் மாஸ்டருக்கும் துப்பாக்கிக்கும் இப்படி ஒரு கனக்ட் இருக்கா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் ஆடியோ லான்ச்சை தொகுத்து வழங்கிய பாவனா, செம தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் பற்றி பாவனா கருத்து | anchor bhavna opens on lokesh kanagaraj, anirudh's master audio launch and vijay's thuppakki in twitter

விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இதனிடையே நேற்று மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் ஆடியோ லான்ச்சை தொகுத்து வழங்கிய பாவனாவை டேக் செய்து ரசிகர் ஒரு பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், 'தளபதியின் மைல்ஸ்டோன் படமான துப்பாக்கி ஆடியோ லான்ச்சை தொகுத்து வழங்கிய பாவனா, இப்போது மாஸ்டர் ஆடியோ லான்ச்சை தொகுத்து வழங்குகிறார். கண்டிப்பா மாஸ்டரும் ஒரு மைல்ஸ்டோன் படமாக இருக்கும்' என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த பாவனா, 'உங்கள் நினைவாற்றல் செம. எப்போதும் விஜய்யின் படங்கள் பென்ச்மார்க் செட் செய்ய வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor