''விஜய் ரொம்ப வருத்தப்பட்டாரு'' - 'பிகில்' பட நிகழ்வு குறித்து பிரபல நடிகர் ஓபன் அப்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 02, 2019 06:11 PM
2 டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா தயாரித்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் ஜாக்பாட். இந்த படத்தில் ஜோதிகா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். கல்யாண் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரேவதி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய ஆனந்த ராஜ் Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், பிகில் சூட்டிங்கில் இருந்தேன். எனக்கும் விஜய்க்குமான காட்சிகள் படமாக்கப்பட்டுவந்தது.
அப்போது நான் ஜாக்பாட் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க செல்கிறேன் என்று விஜய்யிடம் தெரிவித்தேன். அதற்கு விஜய், சரி போய் வாருங்கள் என்றார். பின்னர் மறுநாள் என்னிடம் இசை வெளியீட்டு விழா எப்படி இருந்தது ? என்று கேட்டார்.
நீண்ட தூரம் இருந்ததால் என்னால் செல்வதற்கு தாமதமாகி விட்டது. அதனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்றேன். அதனை கேட்டு வருத்தப்பட்ட விஜய், பின்னாடி இருந்த அட்லியை பார்த்தார் என்று தெரிவித்தார்.
''விஜய் ரொம்ப வருத்தப்பட்டாரு'' - 'பிகில்' பட நிகழ்வு குறித்து பிரபல நடிகர் ஓபன் அப் வீடியோ