ரஜினி, விஜய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு தேசிய விருது இயக்குநர் வருத்தம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 02, 2019 11:11 AM
ரஜினி, விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய திரைப்பட இயக்குனர் ராஜு முருகன், தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இயக்குனர் ராஜு முருகன் ஒரு எழுத்தாளரும் ஆவார்.
இந்நிலையில் ராஜு முருகன், சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ”யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி என்று இருக்க, நம்ம பையனுக்கும் ஒரு பேர் வச்சு விடுங்க” என்று அந்த திரைப்படத்தின் கதாநாயகனை சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.
இதனால் கொந்தளித்த விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள், சமூக வலைத்தளங்ளில் ராஜு முருகனை கண்டித்து பல பதிவுகளை பகிர்ந்து வந்தனர். இதனையடுத்து இயக்குனர் ராஜு முருகன், தனது டிவிட்டர் பக்கத்தில், எந்த உள்நோக்கமும் இல்லாமல் தான் அவ்வாறு பேசியதாகவும், விஜய் மற்றும் ரஜினி ஆகியோர் உழைப்பால், அர்ப்பணிப்பால் முன்னேரியவர்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.
ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன். ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள்.
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) August 1, 2019