அம்மாவானார் எமி ஜாக்சன்.. குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 23, 2019 04:51 PM
பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்துள்ளதை, அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன், இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘2.0’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலதிபர் George Panayiotou உடனான காதல் பற்றி அறிவித்ததுடன், தான் கர்ப்பமாக இருப்பதையும் இன்ஸ்டாகிராம் மூலம் உலகிற்கு அறிவித்தார். கர்ப்பத்தை அறிவித்த எமி ஜாக்சன், அடுத்த சில மாதத்தில் தனது வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைத்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இதனிடையே, தாய்மை குறித்தும், தனது குழந்தையின் வளர்ச்சி குறித்தும் அவ்வபோது எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பகிர்ந்து வந்தார். சமீபத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் கலந்துக் கொண்ட எமி ஜாக்சனின் மேற்கத்திய முறைப்படி நடந்தது.
இந்நிலையில், பிறந்த குழந்தை மற்றும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், ‘எங்களது தேவதை. உலகிற்கு உன்னை வரவேற்கிறோம் ஆண்ட்ரியாஸ்’ என பதிவிட்டுள்ளார்.