காதலருடனான நிச்சயதார்த்த ஃபோட்டோவை பகிர்ந்த எமி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விஜய்யின் 'மதராஸப்பட்டினம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்து நாட்டை சார்ந்தவரான இவர், நடிகர் விஜய்யின் 'தெறி', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0', 'ஐ' போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்றார்.

Amy Jackson shares her Engagement photos in Instagram

இவர் George Panayiotou என்பவரை காலிப்பதாக கடந்த வருடம்  அறிவித்தார். பின்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அதில், நாங்கள் நிச்சயதார்த்தத்தை கொண்டாடியதால் இன்று மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. இதனை சிறப்பாக மாற்றிய நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும்  நன்றி என்று  பகிர்ந்துள்ளார்.