‘7 மாதம்... தாய்மையை கொண்டாடும் எமி ஜாக்சன்’ - வைரலாகும் அரை நிர்வாண புகைப்படம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 08, 2019 01:53 PM
தமிழ் சினிமாவில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன், தனது குழந்தையின் வளர்ச்சி குறித்து இன்ஸ்டாகிரமில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘2.0’ திரைப்படத்தில் நடித்திருந்த எமி, ஜாக்சன், கடந்த சில மாதங்கங்களுக்கு முன் தொழிலதிபர் George Panayiotou உடனான காதல் பற்றி அறிவித்ததுடன், தான் கர்ப்பமாக இருப்பதையும் இன்ஸ்டாகிராம் மூலம் உலகிற்கு அறிவித்தார். கர்ப்பத்தை அறிவித்த எமி ஜாக்சன், அடுத்த சில மாதத்தில் தனது வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைத்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், தனது குழந்தை 33 வாரம் வளர்ச்சி அடைந்திருப்பதையும், சம்மரின் தனது கர்ப்ப காலத்தை என்ஜாய் செய்வதாக எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் அரை நிர்வாண புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.