தமிழ் சினிமாவில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன், தனது குழந்தையின் வளர்ச்சி குறித்து இன்ஸ்டாகிரமில் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘2.0’ திரைப்படத்தில் நடித்திருந்த எமி, ஜாக்சன், கடந்த சில மாதங்கங்களுக்கு முன் தொழிலதிபர் George Panayiotou உடனான காதல் பற்றி அறிவித்ததுடன், தான் கர்ப்பமாக இருப்பதையும் இன்ஸ்டாகிராம் மூலம் உலகிற்கு அறிவித்தார். கர்ப்பத்தை அறிவித்த எமி ஜாக்சன், அடுத்த சில மாதத்தில் தனது வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைத்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், தனது குழந்தை 22 வாரம் வளர்ச்சி அடைந்திருப்பதை வீடியோ மூலம் சொன்ன எமி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் ஒவ்வொரு வாரமும் தனது குழந்தையின் வளர்ச்சியை புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகிறார்.
தாய்மையை பெருமையுடன் கொண்டாடி வரும் எமி ஜாக்சன், அண்மையில் தனது கணவருடன் பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு தனது 6 மாத குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேனில் பார்த்து பரவசமடைந்ததுடன், அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
6 மாத கருவை ஸ்கேனில் பார்த்து பரவசமடைந்த எமி - வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ் வீடியோ