www.garudabazaar.com

ஜனனி போனப்போ ஏன் அவ்ளோ Feel பண்ணீங்க?.. மனைவி கேள்விக்கு அமுதவாணன் சொன்ன பதில் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

Amudhavanan wife questions about janany elimination

Also Read | தனா வெளிய போனதும் பாதிச்ச விஷயம்.. முதல் முறையாக ஷிவின் உடைத்த சீக்ரெட்!!.. அட, ஆமால்ல!!

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.

இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

Amudhavanan wife questions about janany elimination

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இந்த நிலையில், Freeze டாஸ்க்கின் போது அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர். கணவர் அமுதவாணனை பார்த்ததும் அவரது மனைவி கட்டியணைத்து கண்ணீர் விட, மிகவும் எமோஷனலான தருணமாகவும் அமைந்திருந்தது.

Amudhavanan wife questions about janany elimination

ஆனால், அதனை அப்படியே ஒரு கலகலப்பான தருணமாக மாற்றி பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் சிரிக்க வைத்திருந்தார் அமுதவாணனின் மகன். தந்தையை போல அவருக்கும் மிமிக்ரி மற்றும் காமெடி உள்ளிட்ட விஷயங்கள் தெரியும் என சில போட்டியாளர்கள் சிறுவனிடம் கேட்கின்றனர். அதன் பின்னர், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை போல அப்படியே அமுதவாணனின் மகன் இமிடேட் செய்து வசனங்களையும் அப்படியே பேசி அனைவரையும் அவர் பங்கம் செய்திருந்தார்.

Amudhavanan wife questions about janany elimination

இந்த நிலையில், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் குறித்து அமுதவாணன் மற்றும் அவரது மனைவி பேசிக் கொண்டிருந்த விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

முதலில் பேசும் அமுதவாணன், ஜனனி எப்போதும் டீ போட்டு தருவதை நினைத்து ஃபீல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது பேசும் அமுதவாணன் மனைவி, "எங்களை நெனச்சு ஃபீல் பண்ணல, போனவங்கள நெனச்சு ஃபீல் பண்றியா?" என கேட்கிறார். இதற்கு விளக்கம் கொடுக்கும் அமுதவாணன், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோரின் பெற்றோர்கள், Freeze டாஸ்க்கில் வருவதை அவர்கள் எதிர்பார்த்து இருந்ததாகவும் ஆனால் இரண்டு பேருக்கும் அது நடக்காமல் போனதாகவும் குறிப்பிட்டார்.

Amudhavanan wife questions about janany elimination

ஜனனி வெளியே போனதற்காக ஏன் அதிகம் ஃபீல் செய்தீர்கள் என்று மீண்டும் அமுதவாணன் மனைவி கேட்க, "என் கூட தான் அந்த பொண்ணு அதிகமா பேசிட்டு இருக்கும். என்கூட தான் நல்ல இதுவா இருக்கும் எல்லாமே. அப்படின்னு இருக்குறப்போ அவ போகும்போது, கடைசியில நீ நல்லா பண்ணம்மானு கூட சொல்லல" என அமுதவாணன் கூறியதும், அவரது மனைவி நீங்கள் ரொம்ப நேரம் அழுதீர்கள் என்பதையும் நினைவு  கூருகிறார்.

Also Read | "ஆவேசமா பேசுன விஷயத்த அமுதவாணன் பையன் இப்டி Fun பண்ணிட்டாரே".. விக்ரமன் குடுத்த Reaction!!

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan wife questions about janany elimination

People looking for online information on Amudhavanan, Amudhavanan wife, Bigg boss 6 tamil, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Janany elimination, Vijay Television, Vijay tv will find this news story useful.