www.garudabazaar.com

போடு..! ஜெயிச்ச கையோடு I LOVE U சொல்லி அமீரிடம் Propose செய்த பாவனி.. BB Jodigal 2

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி.

Pavani Love Proposal to Amir after winning BB Jodigal 2

விஜய் டிவி சின்னத்திரையில் நாயகியாக வலம் வந்த பாவனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, கணவரை இழந்த பாவனி தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை வாழ்ந்து கொண்டிருப்பதாக பகிர்ந்து இருந்தார்.  இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக விஜய் டிவி கோரியோகிராபராக இருந்த அமீர் உள்ளே வந்தார்.

Pavani Love Proposal to Amir after winning BB Jodigal 2

வந்தவர் பாவனிடம் விளையாட்டாக ஆரம்பத்தில் பேசினாலும், பின்பு சீரியஸாக தன்னுடைய காதலை பாவனிக்கு சொல்ல தொடங்கினார். ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மையமாக வைத்து BB Jodigal நிகழ்ச்சி நடந்து வந்து கொண்டிருந்தது. அதன்படி BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டான்சராக பங்குபெற்ற அமீர் மற்றும் பாவனி இருவரும் டான்ஸ் பார்ட்னராக இணைந்து ஆடி வந்தனர்.

Pavani Love Proposal to Amir after winning BB Jodigal 2

இந்த டான்ஸில் அண்மையில் இருவருக்கும் திருமணம் ஆகும் காட்சிகள் கூட அரங்கேறின. இந்த நிலையில் BB Jodigal  நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இருவரும் தற்போது வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கின்றனர்.  இந்நிலையில்தான் இது குறித்து பகிர்ந்தது மட்டுமின்றி, அமீருடன் வாழ்க்கையை தொடங்குவது குறித்தும் பாவனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

Pavani Love Proposal to Amir after winning BB Jodigal 2

அதில், தம் ஒப்பனையாளர்களுக்கு நன்றி சொன்ன பாவனி, அமீர் குறித்து பேசும்போது, “அபீர் மாஸ்டர்.. டான்ஸ் ஆடுவது மிகப்பெரிய சவால். அதுவும் இப்படி ஒரு போட்டியில் ஆடுவது என்பது எனக்கு பயம். ஆனால் நீங்கள் நல்ல மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். சரிவர டான்ஸ் ஆட வராத ஒருவரை வெற்றிபெரும் அளவுக்கு ஆட வைத்திருக்கிறீர்கள். இது உங்களுக்கு மிகப்பெரிய டாஸ்காக இருந்திருக்கும். இது ஒரு மிகச் சிறப்பான பயணம். ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவித்தேன்.

Pavani Love Proposal to Amir after winning BB Jodigal 2

உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நீங்கள் மிகச் சிறந்த மனிதர். மாஸ்டர். டான்ஸ் ஆடும் போது மிகவும் உறுதுணையானவர். நல்ல நண்பர் . எனவே நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த இணையராக இருங்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா.? எப்போதும் ஐ லவ் யூ” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Pavani Love Proposal to Amir after winning BB Jodigal 2

People looking for online information on Amir Pavani dance, Amir pavani love, Amir Pavani Marriage will find this news story useful.