"நான் அவங்க Control-ல தான்".. BB ஜோடியில் ஆடி முடிச்சதும் பாவனி பற்றி அமீர் வைரல் பேச்சு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென பிரத்யேகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Amir about pavani after dance in bb jodigal season 2

தமிழில் இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார்.

இதனையடுத்து, ஐந்து பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்டவர்களை வைத்து, பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வந்தது. இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அமீர் - பாவனி ஜோடி

இதன் பின்னர், தற்போது விஜய் டிவியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து, "பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2" என்ற பெயரில், நடன நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஐந்தாவது சீசன் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ஆகியோர், ஜோடியாக சேர்ந்து நடனமாடி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர், இன்ஸ்டாவில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மற்றும் அமீர் குறித்து ரசிகர்கள் கேட்டிருந்த கேள்விக்கு, பாவனி அளித்திருந்த பதில்கள், அதிகம் வைரலாகி இருந்தது. அதே போல, சமீபத்திய பிக்பாஸ் ஜோடிகள் எபிசோடு ஒன்றில், "அமீரை எனக்கு பிடிக்கும். ஆனால், எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்" என பாவனி பேசி இருந்தார்.

Amir about pavani after dance in bb jodigal season 2

இதனைக் கேட்டதும், சந்தோஷத்தில் மூழ்கிய அமீர், குதூகலத்தில் கொண்டாடவும் செய்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தொடர்பாக, தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ ஒன்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

அவங்க கண்ட்ரோல்'ல இருக்கேன்

ஜூன் 5 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பான ப்ரோமோக்களும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கமல் படத்தில் வரும் பாடல்களுக்கும் போட்டியளர்கள் நடனமாட உள்ளனர். அந்த வகையில், அமீர் மற்றும் பாவனி ஆகியோர், மன்மதன் அம்பு படத்தில் வரும் 'நீலவானம்' பாடலுக்கு நடனமாடும் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

Amir about pavani after dance in bb jodigal season 2

அப்போது பேசும் அமீர், "இப்போ நான் Choreographer-அ, இல்ல அவங்களான்னு எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு. ஃபர்ஸ்ட் மூணு நாள் தான், என் கண்ட்ரோல்'ல இருக்காங்க. அடுத்து மூணு நாள் நான் தான் அவங்க கண்ட்ரோல்'ல இருக்கேன்" என அமீர் பேசி இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் குறித்து, பிக்பாஸ் ரசிகர்கள் அதிகம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Amir about pavani after dance in bb jodigal season 2

People looking for online information on Amir, BB Jodigal, BB Jodigal Season 2, Pavani will find this news story useful.