Vilangu Others
www.garudabazaar.com

ரிலீஸ் தள்ளிப்போன பிரபாஸின் PAN INDIA திரைப்படம்.. நன்றி சொன்ன அமீர் கான்! பின்னணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: அமீர்கானின் அறிக்கையால் பாகுபலி பிரபாஸின் PAN INDIA திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

prabhas pan india film release date postponed due to amir kahan laal singh chaddha

சமந்தா நடிக்கும் புதிய படம்! 3 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்ட செட்! படக்குழு வெளியிட்ட BTS PHOTOS!

தமிழ் புத்தாண்டான ஏப்ரல் -14 அன்று யாஷ் ந்டித்த KGF-2 படம் ரிலீஸ் ஆகிறது. இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்கி உள்ளது. இதே நாளில் அமீர் கான் நடிப்பில் FORREST GUMP படத்தின் ரீமேக் ஆன லால் சிங் ஷத்தா படமும் ரிலிசாகிறது.  1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், 677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய படம் இது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP கதாபாத்திரத்தில் அமீர் கான்  நடிக்கிறார். அமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு மாற்றாக நாக சைதன்யா முக்கிய ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரிக்கிறார்.

இந்த படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது, அதனை முன்னிட்டு முதல் லுக் POSTER வந்து நல்ல வரவேற்பை பெற்றது, இச்சமயத்தில் இந்த லால் சிங் ஷத்தா படத்தின் வெளியீட்டை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு படக்குழு ஒத்தி வைத்துவிட்டது, இதற்கான அறிவிப்பை லுக் POSTER வழியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன் படி தமிழ் புத்தாண்டான ஏப்ரல் -14 அன்று இந்த படம் KGF-2 படத்துடன் ரிலீஸ் ஆகிறது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

prabhas pan india film release date postponed due to amir kahan laal singh chaddha

"லால் சிங் ஷத்தா படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் படத்தின் வெளியீடு டிசம்பரில் இருந்து ஏப்ரலுக்கு மாறியதாகவும், தேதி மாற்றத்தை அறிவிப்பதற்கு முன்பே ‘கே.ஜி.எஃப் 2' படத்தின் குழுவினருக்கு என்னுடைய சூழலை விளக்கி, கடிதம் எழுதியிருந்தேன். ‘கே.ஜி.எஃப் 2' குழுவினரும் என்னுடைய கடிதத்தை ஏற்றுக்கொண்டு படத்தின் வெளியீட்டில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தனர். இதனால் நான் நெகிழ்ந்து போனேன்." என ஆமிர் கான் முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் நடிகர் ஆமிர் கான் பெருந்தன்மையுடன் ‘கே.ஜி.எஃப் 2'  படத்தின் முக்கிய அங்கமான நடிகர் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல், தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூர் ஆகியோரிடம் தான் மன்னிப்பு கேட்டதாக நடிகர் ஆமிர் கான் அப்போது கூறி இருந்தார்.

prabhas pan india film release date postponed due to amir kahan laal singh chaddha

இந்நிலையில் புதிய அறிக்கையை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து அறிவித்துள்ளார் அதில், "எங்கள் திரைப்படமான லால் சிங் சத்தா, திட்டமிட்டபடி ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகாது என்பதை அறிவிக்கவே இது. எங்களால் படத்தை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போனதே இதற்குக் காரணம். இப்படம் இப்போது 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. திரு.பூஷன் குமார், டி சீரிஸ், ஓம் ரவுத் மற்றும் ஆதிபுருஷின் முழு குழுவிற்கும் எங்கள் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11, 2022 அன்று வரக்கூடிய வகையில் பிரபாஸ், க்ரித்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் நடித்துள்ள ஆதி புருஷ் படக்குழு மிகவும் உதவியாகவும், புரிந்துணர்வுடனும் இருந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்". என தெரிவித்துள்ளார்.

prabhas pan india film release date postponed due to amir kahan laal singh chaddha

ராமயணத்தை மையமாக வைத்து உருவாகும் ஆடிபுருஷ் படத்தில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து உள்ளார். இந்த படத்தில் சயிப் அலி கான் முக்கிய வேடத்தில் பிரபாசுடன் இணைந்து நடிக்கிறார். நடிகை "பரம சுந்தரி" புகழ் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கிறார்.

prabhas pan india film release date postponed due to amir kahan laal singh chaddha

இந்த படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக உள்ளது. ராம் கதாபாத்திரத்தில் பிரபாஸூம் ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சையஃப் அலி கானும் நடிக்கின்றனர். தற்போது ஆதிபுருஷ் ரிலீஸ் ஆகஸ்டில் இருந்து தள்ளிப்போகி உள்ளது

PICS: தனது காதலருடன் தாஜ்மஹால் சென்ற பிரபல தமிழ் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்

prabhas pan india film release date postponed due to amir kahan laal singh chaddha

People looking for online information on Amir kahan laal singh chaddha, அமீர் கான், கே.ஜி.எஃப் 2, லால் சிங் ஷத்தா, Pan india film, Prabhas will find this news story useful.