www.garudabazaar.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கோரிக்கை வைத்த 'பிரேமம்' அல்போன்ஸ் புத்திரன்.. Full சப்போர்ட்😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Alphonse Puthren request to super Star Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை  அல்போன்ஸ் புத்ரன் இரண்டாவது படமாக இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிறகு  கோல்டு படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன் படத்தில் நடித்த 40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்தனர். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்தனர்.

Alphonse Puthren request to super Star Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

கோல்ட் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பின்னர் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் ஒரு பதிவை பதிவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவில், "சூப்பர் ஸ்டார் ஸ்டைல் ​​மன்னன் ரஜினிகாந்த் அல்லது சிவாஜி சார். இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்குங்கள். உங்கள் பேச்சு நான் கேட்டதிலேயே சிறப்பானது சார். நீங்கள் எனக்கு ஓஷோவை விட தனித்துவமானவர் மற்றும் விலைமதிப்பற்றவர். எனவே தயவு செய்து இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி “நீங்கள் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தியது போல்” பேசத் தொடங்குங்கள். உங்கள் பேச்சுகள் எப்பொழுதும் எனது மனதை நெகிழ வைக்கின்றன. யாரேனும் பேசும் போது புல்லரிப்பது மிகவும் அரிது.

உங்கள் வார்த்தைகளுக்காக மில்லியன் கணக்கான மற்றும் பில்லியன்கள் மற்றும் ஜில்லியன்கள் கணக்கில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எந்த விசேஷ நிகழ்வுக்கும் காத்திருக்க வேண்டாம் சார். உங்களுக்குத் தோன்றும் போதெல்லாம் பேசுங்கள். உங்கள் ரசிகர்கள் அனைவரும் கேட்பார்கள், நீங்கள் A B C D என்று சொன்னாலும்.. அதுவும் ரிதத்தில் இருக்கும். அன்பும் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் என்றும் இருக்கட்டும் சார். உங்கள் ரசிகன். அல்போன்ஸ் புத்திரன் 🙏 😀" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren request to super Star Rajinikanth

People looking for online information on Alphonse Puthren, Superstar Rajinikanth will find this news story useful.