www.garudabazaar.com

இதோ வந்துருச்சு.. OTT-யில் ரிலீஸாகும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய "கோல்டு".. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோல்டு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Alphonse Puthren Gold Movie OTT Release Date Announced

Also Read | நடிகர் RK சுரேஷ் மனைவியின் வளைகாப்பு.. நேரில் வாழ்த்திய சினிமா & அரசியல் பிரபலங்கள்!

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை  அல்போன்ஸ் புத்ரன் இரண்டாவது படமாக இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

Alphonse Puthren Gold Movie OTT Release Date Announced

அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிறகு  கோல்டு படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன் படத்தில் நடித்த 40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்தனர். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.

Alphonse Puthren Gold Movie OTT Release Date Announced

கோல்ட் படம் கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி நெட்வொர்க்கின் சூர்யா & சன் டிவி தொலைக்காட்சி சேனல்கள் கைப்பற்றி உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Alphonse Puthren Gold Movie OTT Release Date Announced

இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.  இந்த படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் 29 வினாடிகள் ஓடும். இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அல்போன்ஸ் புத்திரன் அறிவித்துள்ளார்.

Also Read | துணிவு படத்தில் G.P. முத்து.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! செம சர்ப்ரைஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren Gold Movie OTT Release Date Announced

People looking for online information on Alphonse Putharen, Alphonse Puthren, Amazon Prime Video, Gold, Gold Movie OTT Release Update will find this news story useful.