www.garudabazaar.com

"யாரு இவரு?".. அல்போன்ஸ் புத்ரன் பத்தி ரசிகர் கேட்ட கேள்வி.. பதிலுக்கு அவரு போட்ட Comment தான் 🔥😎!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், ரசிகரின் கமெண்ட்டிற்கு தற்போது தெரிவித்துள்ள பதில், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

fan ask about alphonse puthren his response viral

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

இதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தையும் அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர்.

பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு கோல்டு திரைப்படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக பிரித்விராஜ் நடித்துள்ளார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். Gold படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இந்த திரைப்படம் ஓணம் விருந்தாக கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி திரை அரங்கில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பட வேலைகள் முடிவடையாததால் ரிலீஸ் தாமதமானது. இதன் பின்னர், தொடர்ந்து படம் தாமாதமாகி வந்ததால் ரசிகர்கள் பலரும் கோல்டு பிடத்தின் ரிலீஸ் எப்போது என்றும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனும் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில், கோல்டு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. அதன்படி, டிசம்பர் 01 ஆம் தேதியன்று கோல்டு திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. Gold படத்தின் டீசர் மட்டுமே வெளியாகி இருந்தது. இது தவிர, சிங்கிள் அல்லது ட்ரைலர் குறித்த அப்டேட்கள் எதுவும் வெளிவரவில்லை.

இன்னும் ஒரு சில தினங்களே உள்ளதால், வேறு எது அப்டேட்களும் வெளி வருமா என்பது குறித்தும் சிலர் குறிப்பிட்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றில், இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் செய்த கமெண்ட் தொடர்பான விஷயம், ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில், Gold படத்தின் போஸ்ட் ஒன்று பகிரப்பட்டிருந்தது. அப்போது கீழே ரசிகர் ஒருவர், "குமாரு யாரு இவரு?" என அல்போன்ஸ் புத்ரனை டேக்  செய்து கேட்க, அதன் கீழ் பதில் சொன்ன அல்போன்ஸ் புத்ரன், "குமாரு, என்னோட படம் ரிலீஸ் ஆகும் போது தியேட்டர் பக்கம் வந்தா தெரிஞ்சுடும், நான் யாருன்னு" என கமெண்ட் செய்ய, முதலில் யார் என கேட்ட ரசிகர், "சார், எனக்கு நீங்க Reply பண்ணிடீங்களா?. அய்யா, பிரேமம் டைரக்டரா நீங்க, தெரியாம உங்கள யாருன்னு கேட்டுட்டேன், மன்னிச்சுக்கோங்க" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

fan ask about alphonse puthren his response viral

People looking for online information on Alphonse Puthren, Gold, Nayanthara, Prithviraj will find this news story useful.