LIGER D Logo Top
www.garudabazaar.com

தமிழ் & மலையாளத்தில் வெளியாகும் 'GOLD'.. TV ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய முன்னணி சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொச்சி: 'கோல்ட்' படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Alphonse Puthren Gold Movie Satellite TV Rights Bagged by Sun Network Surya

Also Read | பிரித்விராஜ் & நயன்தாரா நடிக்கும் 'கோல்டு'.. OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், பிரேமம் படத்தை தொடர்ந்து  கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படம் ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை  நடிகர் பிரித்விராஜ் ஹீரோவாக நடித்து தயாரிக்கவும் செய்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

Gold படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Alphonse Puthren Gold Movie Satellite TV Rights Bagged by Sun Network Surya

கோல்ட் படம் வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி ஓணம் திருநாளை முன்னிட்டு தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை வலிமை படத்தின் கோயம்புத்தூர் ஏரியா வினியோகஸ்தரான SSI புரொடக்ஷன்ஸ் சுப்பையா கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாநாடு படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

Alphonse Puthren Gold Movie Satellite TV Rights Bagged by Sun Network Surya

இந்நிலையில் இந்த படத்தின் மேலும் ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சூர்யா தொலைக்காட்சி சேனல் கைப்பற்றி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா சேனலின் லோகோவும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

Alphonse Puthren Gold Movie Satellite TV Rights Bagged by Sun Network Surya

Gold படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அல்போன்ஸ் சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். இந்த போஸ்டர் முழுக்க, பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன் படத்தில் நடித்த 40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகளும் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.

Also Read | "நலிந்த நிலையிலும்".. பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்த பின் வைரமுத்து உருக்கமான ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren Gold Movie Satellite TV Rights Bagged by Sun Network Surya

People looking for online information on Alphonse Putharen, Alphonse Puthren Gold Movie, Gold, Gold Movie, Nayanthara, Prithviraj, Sun Network Surya will find this news story useful.