பிரபல சீரியல் நடிகையின் வளைபூட்டலில் குவிந்த சின்னத்திரை பிரபலங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் நடிகை சந்தோஷியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் அவரது நெருங்கிய தோழிகளும், சீரியல் நடிகைகளும் கலந்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Popular Serial actress Santhoshi baby showering function pics goes viral

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த ‘பாபா’ திரைப்படத்தில் மனிஷா கொய்ராலாவின் சகோதரியாக நடித்தவர் சந்தோஷி. இது தவிர, ‘ஆசை ஆசையாய்’, ‘பாலா’, ‘மிலிட்டரி’, ‘உன்னை சரணடைந்தேன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள சந்தோஷி, சினிமாவில் நடிப்பதை தவிர்த்து, சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மரகதவீணை’ என்ற சீரியலில் இறுதியாக நடித்திருந்த சந்தோஷி, கடந்த சில ஆண்டுகளாக சீரியலிலும் நடிக்காமல், தனது சொந்த பிசினஸில் கவனம் செலுத்தி வந்தார்.

இவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். 5 மாதமாக இருக்கும் சந்தோஷிக்கு அவரது சின்னத்திரை தோழிகள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.