www.garudabazaar.com

எல்லாரும் நாமினேட் பண்ண அந்த 3 பேர்.. பரபரப்புக்கு பஞ்சமில்லாத BiggBoss Ultimate..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 28, பிப்ரவரி 202: பரபரப்பாக நடைபெற்றுவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனைத்து ஹவுஸ் மேட்களும் சொல்லி வைத்தார் போல குறிப்பிட்ட 3 போட்டியாளர்களின் பெயரை நாமினேட் செய்துள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

All Housemates nominate these 3 members in Bigg Boss Ultimate Tamil

எலிமினேஷன் இல்லை

அண்மையில் 'விக்ரம்' திரைப்பட பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில், இளம் நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து வந்த உடனேயே எலிமினேஷன் இல்லை என ஆரம்பித்த நடிகர் சிம்பு, அடுத்த வாரத்தில் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என முடித்துவிட்டார். இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது.

ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி, மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக  உள்ளே வந்துள்ளார். இதேபோல் கலக்கப்போவது யாரு பிரபல நடிகர் சதீஷ் வைல்டு கார்டு எண்ட்ரியாக முதன் முதலாக பிக்பாஸ் வீட்டுக்குள்ளே வந்திருக்கிறார்.

All Housemates nominate these 3 members in Bigg Boss Ultimate Tamil

நாமினேட்

டபுள் எவிக்ஷன் உண்டு என சிம்பு சொன்னதை அடுத்து யார் யார் பெயர் நாமினேட் செய்யப்பட இருக்கிறது? என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில் அபிராமி, ஜூலி மற்றும் அனிதாவின் பெயர்களை போட்டியாளர்களும் நாமினேட் செய்யும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது.

முன்னதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. இவர்களில் 7 பேர் ஆண் போட்டியாளர்கள். 7 பேர் பெண் போட்டியாளர்கள். இதில் இதுவரை வனிதா விஜயக்குமார், சுஜா வருணி, ஷாரிக் ஹாசன், அபினய் ஆகியோர் வெளியேறி உள்ளனர். இவர்களுள் வனிதா விஜயகுமார், தம் உடல் நலம் மற்றும் மனநலம் கருதி தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து ரிஸ்க் எடுக்க முடியாது என தெரிவித்து, பிக்பாஸிடம் முறையாக சொல்லிவிட்டு, முழுமையாக வெளியேறினார்.

தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா, தாமரை, அனிதா, அபிராமி, நிரூப், ஜூலி, தாடி பாலாஜி, சினேகன், சுருதி, சதீஷ் ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர்.

All Housemates nominate these 3 members in Bigg Boss Ultimate Tamil

இந்நிலையில், வரும் வாரம் நடைபெறவிருக்கும் டபுள் எவிக்ஷனில் யார் யார்  வெளியேறவிருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

24 மணி நேரமும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

All Housemates nominate these 3 members in Bigg Boss Ultimate Tamil

People looking for online information on BBUltimate Tamil, Bigg Boss OTT, Bigg Boss Tamil will find this news story useful.