Valimai BWE
www.garudabazaar.com

BBUltimate: "ரம்யா கிருஷ்ணனா?".. Bigg Boss-ல இருந்து வெளில வந்ததும் வனிதாவின் அனல் தெறிக்கும் முதல் Post!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 24, பிப்ரவரி 2022 : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு காரணத்தை குறிப்பிட்டு வனிதா விஜயகுமார் பரபரப்பு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

Vanitha first ever post after exiting from BBUltimate Tamil

இதனால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன்..

முன்னதாக பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் செலிபிடிட்டி பிரஸ் மீட் டாஸ்க்கில் பேசியிருந்த வனிதா, “பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்கள் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அதனால் நாள் முழுவதும் என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் ஓடிடியில் 24 மணி நேரமும் நடப்பதை காட்டப் போகிறார்கள் என்பதால் தான் நான் இந்த முறை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். இல்லையென்றால் வந்திருக்கவே மாட்டேன்.” என்று கூறியிருந்தார்.

ரிஸ்க் எடுக்க முடியாது

இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் வீட்டின் கதவை தட்டிய வனிதா விஜயகுமார், “கதவை திறங்க பிக்பாஸ்” என சொல்லி கூச்சலிட்டு பார்த்தார். பின்னர் வனிதாவை தனியே அழைத்து கன்ஃபெஷன் ரூமில் வைத்து அவரிடம் பேசிய பிக்பாஸ், வனிதா சொல்வது என்ன என வினவினார்.

அப்போது பிக்பாஸிடம் மனம் விட்டு பேசிய வனிதா விஜயகுமார், “பிக்பாஸ் என் மென்டல் மற்றும் பிசிக்கல் ஹெல்த்தை கருத்தில்கொண்டு இனி நான் இந்த வீட்டில் இருந்து ரிஸ்க் எடுக்க முடியாது, ஷோவில் இருந்து விலகுகிறேன். எதுவாக இருந்தாலும் வெளியே சென்று பார்த்துக் கொள்கிறேன்!” என கூறினார். அப்போது “இதுதான் உங்க இறுதி முடிவா வனிதா?” என்று கேட்ட பிக்பாஸ் பின்னர், வனிதா, “ஆமாம் பிக்பாஸ்” என்றதும் வனிதாவை சரி என்று அனுப்பிவிட்டார்.

முட்டாள்தனமான வதந்தி

இதனிடையே வனிதா விஜயகுமார், வெளியேறியதற்கு காரணம், அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருப்பது ரம்யா கிருஷ்ணன் என்பதால் இருக்கலாம் என சிலர் கூறி வந்த வதந்திகளுக்கு தற்போது வனிதா விஜய்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதன்படி, தற்போது பிக்பாஸை விட்டு வெளியேறிய வனிதா, தமது ட்விட்டரில்,  தற்போது “நான் #BBUltimate-லிருந்து வெளியேறியதை ரம்யா கிருஷ்ணனுடன் இணைத்து பேசும் அந்த முட்டாள்தனமான வதந்திகளை பரப்புபவர்களுக்கு.. நான் எனக்கு மதிப்பு கொடுத்து, என் முடிவை தேர்ந்தெடுத்தேன்.. நான் மன உளைச்சலுக்கு ஆளானேன், மேலும் குழப்ப நிலையை தாங்க முடியவில்லை.. நான் தைரியமாக இருக்க முடிவு செய்தேன்.

துணிச்சலான முடிவை எடுத்தேன். என் நிலைமையைப் புரிந்துகொண்டு என்னுடன் ஒத்துழைத்தமைக்காக என்டெமால் மற்றும் டிஸ்னி குழுவிற்கு நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன் .. மிகவும் வளர்ந்தவர்களுக்கு இதெல்லாம் வேடிக்கையான விளையாட்டு... இந்த குழந்தைகளை நாடகத்தை ரசிப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய தொகுப்பாளர் சிம்பு

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், புதிய தொகுப்பாளராக நடிகர் சிம்பு, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இளைஞர்களிடையே வைரலாகி வருகிறது.

Also Read: ஸ்ரீதேவி நினைவுநாளில் வலிமை ரிலீஸ்.. ‘டைட்டில் கார்டை’ பார்த்து நெகிழ்ந்த அஜித் ரசிகர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha first ever post after exiting from BBUltimate Tamil

People looking for online information on Balaji Murugadoss, Balaji Murugadoss prank, BBUltimate, BBUltimate Tami, Bigg Boss OTT, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate Tamil, Ramya Krishnan, Vanitha, Vanitha Vijayakumar will find this news story useful.