RRR Others USA
www.garudabazaar.com

BOX OFFICE: "வலிமை" படத்தின் மொத்த வசூல்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பாளர் போனிகபூர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியா: வலிமை படம் உலகம் முழுவதும் வசூலித்த தொகை அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

Ajith Kumar Valimai Official Box Office Collection Report

கடைசியாக அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது.

Ajith Kumar Valimai Official Box Office Collection Report

வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடித்தனர். ராஜ் ஐயப்பா முக்கிய தம்பி வேடத்தில் நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்ற, சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றினார்.

Ajith Kumar Valimai Official Box Office Collection Report

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றினார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்தார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை படம் Zee5 தமிழ் ஒடிடியில் வெளியாக உள்ளது. தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதனை Zee5 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்ச் 25 (வெள்ளி) அன்று வார இறுதியில் வலிமை படம் ரிலீசாக உள்ளது. 

Ajith Kumar Valimai Official Box Office Collection Report

இந்நிலையில் வலிமை படத்தின் மொத்த வசூல் குறித்து தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி வலிமை படம் உலகம் முழுவதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Official Box Office Collection Report

People looking for online information on Ajith Kumar, AK, Boney kapoor, Box Office Collection, Valimai, Valimai Box Office will find this news story useful.