RRR Others USA
www.garudabazaar.com

BB Ultimate: கண்ணீருடன் வெளியேறிய அனிதா.. "உன் Fans-தான் எல்லாத்துக்கும் காரணம்.." யார சொல்றாங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தொகுத்து வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, டிஸ்னி ஹட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

anitha gets evicted in biggboss ultimate speak about bala fans

"ஸாரி சொல்லியிருக்கலாமே?".. பாலாவிடமே கேட்டுவிட்ட சிம்பு.. இந்த வார பரபரப்பு BBUltimate!

இந்த வார இறுதியில் நடிகர் சிம்பு வந்திருந்த நிலையில், இதுவரை இல்லாமல் இந்த முறை சிம்பு பேசியிருந்த விஷயங்கள், அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம், கடந்த வாரத்தில் நடந்த ஏராளாமான பரபரப்பு மற்றும் சர்ச்சை சம்பவங்கள் தான்.

சிம்புவின் என்ட்ரி

"கோழி மாதிரி விளையாட சொன்னா, சேவலா மாறி அடிச்சுக்குறாங்க, கடிச்சுக்குறாங்க, வாங்க விசாரிப்போம்" என கூறிக் கொண்டே என்ட்ரி கொடுத்தார் சிம்பு. நடந்து முடிந்த டாஸ்க் குறித்து, சிம்பு போட்டியாளர்களிடம் விசாரிக்க, வெயில், பசி, மயக்கம் என தாங்கள் ஒவ்வொருவரும் பட்ட கஷ்டத்தை போட்டியாளர்கள் விளக்கினார்கள்.

அனிதாவின் எவிக்ஷன்

நடந்த அனைத்தையும் விட, மிகப் பெரிய பேசு பொருளாக மாறியிருந்தது, அனிதாவின் எவிக்ஷன் தான். மக்களின் வாக்கு அடிப்படையில், அனிதா தான் வெளியேற போகிறார் என்பதை சிம்பு அறிவித்தார். தன்னுடைய வெளியேற்றத்தால், கலங்கி உடைந்து போனார் அனிதா. மறைந்து போன அனிதாவின் தந்தை, கடந்த பிக்பாஸ் சீசனின் போது, அனிதா வெற்றி பெற வேண்டும் என விரும்பினார். ஆனால், அது நிகழவில்லை.

anitha gets evicted in biggboss ultimate speak about bala fans

உன் ரசிகர்கள் தான் காரணம்

இந்த முறையாவது வென்று விடலாம் என்ற அனிதாவின் ஏக்கத்திற்கும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. இது பற்றி, மிகவும் உருக்கத்துடன் அனிதா கருத்து தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம், "உன்னோட ரசிகர்கள் தான் காரணம். எனக்கு எதிரா ஒட்டு போட்டிருப்பாங்க" என பாலா மீதும் ஜாலியாக பழி போட்டார் அனிதா. டாஸ்க் தவிர உங்கள் மீது எனக்கு கோபம் எதுவுமில்லை என பாலாவும் அனிதாவிடம் தெரிவித்தார்.

நானே எதிர்பார்க்கல

அதே போல, அனிதாவின் எவிக்ஷன் பற்றி பேசிய சிம்பு, "நானே எதிர்பார்க்கல. தப்பு பண்ணுனா தான் வெளியே போகணும்ன்னு இல்ல. நான் சந்திக்காத எதிர்ப்பையா நீங்க சந்திச்சுருப்பீங்க" என முழுக்க முழுக்க பாசிட்டிவாக அனிதாவை தேற்றினார். நிஜத்தில், அனிதா போன்ற ஒரு போட்டியாளர் வெளியேறியது, ரசிகர்களுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி தான்.

anitha gets evicted in biggboss ultimate speak about bala fans

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா போன்ற ஒரு போட்டியாளர் வெளியேறி உள்ளதால், அடுத்தடுத்த வாரங்களில், வார நாட்களில் போட்டியாளர்களின் குணம் மற்றும் ஆட்டத்தினை வைத்து தான், மக்களின் முடிவுகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"உங்கள பாக்கணும்ன்னு வந்தா.." 'ஜெய்பீம்' சிறுமி வெளியிட்ட வீடியோ.. கண்ணு எல்லாம் கலங்கிருச்சு

தொடர்புடைய இணைப்புகள்

anitha gets evicted in biggboss ultimate speak about bala fans

People looking for online information on Anithasampath, BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, SilambarasanTR will find this news story useful.