www.garudabazaar.com

வேற மாறி.. நம்பர் 1 -ல் Chilla Chilla.. ட்ரெண்ட் ஆகும் அஜித்தின் துணிவு First சிங்கிள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் முதல் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆகி, பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது.

ajith kumar thunivu chilla chilla single Top trending

முன்னதாக, நடிகர் அஜித் குமார் நடிப்பில் வலிமை திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, அஜித் குமார் நடிப்பில் 'துணிவு' படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் H வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக துணிவு படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் அஜித் குமார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, அமீர், பாவனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

ajith kumar thunivu chilla chilla single Top trending

பொங்கலுக்கு துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால், அடுத்தடுத்து படத்தின் அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இதனிடையே, துணிவு படத்தின் முதல் சிங்கிளான 'Chilla Chilla' சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்த பாடலை பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையில் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ள இந்த பாடல், பலரையும் துள்ளல் போட வைத்து வருகிறது. இத்தகன் காரணமாக, தொடர்ந்து பாடலும் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. மேலும், 24 மணி நேரத்திற்குள் Chilla Chilla பாடல், யூடியூப் தளத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அதே போல, 1 மில்லியன் லைக்குகளுக்கு மேல் 'Chilla Chilla' பாடலின் லிரிக் வீடியோவும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சில்லா சில்லா பாடல் செய்துள்ள மற்றொரு சாதனை குறித்தும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் யூடியூபில் உலக அளவில் அதிக வியூவ்ஸ் குவித்த பாடல்களின் நீண்ட எண்ணிக்கையில் முதலிடத்தையும் சில்லா சில்லா பிடித்துள்ளது. மொத்தம் 9,935,801 பேர் இந்த பாடலை வியூவ் செய்த்ள்ளதாக பட்டியல் மூலம் தெரிய வருகிறது. இதனையும் தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ajith kumar thunivu chilla chilla single Top trending

சமீபத்தில், நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடல் கூட உலக அளவில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

ajith kumar thunivu chilla chilla single Top trending

People looking for online information on Ajith Kumar, Chilla Chilla, Ghibran, H Vinoth, Thunivu will find this news story useful.