வெறுப்பை காட்டாதீங்க - தல, தளபதியுன் இருக்கும் ஃபோட்டோவுடன் வெங்கட் பிரபு சொன்ன மெசேஜ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது சிம்பு நடிப்பில் 'மாநாடு' படத்தை இயக்கி வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது வெங்கட் பிரபுவின் ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இன்று உடன் பிறப்புகள் தினம் என்பதால் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ''உடன்பிறப்புகள் தின வாழ்த்துகள். அன்பை பகிருங்கள் வெறுப்பை பகிராதீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Entertainment sub editor