"கடவுளே.. மன்னிச்சிருங்க"... விக்னேஷ் சிவன் வெளியிட்ட மனதை நொறுக்கும் வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா அச்சறுத்தலில் இருக்கிறது. மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார். இப்படி பட்ட சூழ்நிலையை இந்திய மக்கள் இதுவரை சந்தித்ததில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. வேலை செய்பவர்களும் கூட வீட்டில் இருந்து தான் வேலை செய்து வருகின்றனர். பலரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.

Director Vignesh Sivan Shares An Heart Breaking Video On Corona Lockdown Effects கொரோனா பாதிப்பு விக்னேஷ் சிவன் வெளியிட்ட மனதை நொறுக்கும் வீடி

தலைநகர் டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக கால்நடையாகவே சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். சரியான உணவு இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு "கஷ்டம், கஷ்டம், கஷ்டம். மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு நடந்தே செல்கின்றனர். சீக்கிரமே இவைகள் முடிவடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor