பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது 50வது பிறந்தநாளை நேற்று முன் தினம் கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்துக் கூறிய பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு நேற்று அவர் நன்றி தெரிவித்தார்.

அதில், இந்தியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அண்ணன் குருனால் பாண்டியா அஜய் தேவ்கனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். குருனால் பாண்டியா பார்ப்பதற்கு நடிகர் அஜய் தேவ்கன் போன்றே இருப்பதாக பலரும் கூறியுள்ளனர்.
குருனால் பாண்டியாவின் ட்வீட்டிற்கு நன்றி தெரிவித்த அஜய் தேவ்கன், நன்றி குருனால். இருவரும் சேர்ந்து டபுள் ஆக்ஷன் ரோல் படம் ஒன்று பண்ணலாம் என குறிப்பிட்டுள்ளார். இது இருவரது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் ஒரே ஜாடையில் இருப்பதால், பலரும் குருனால் பாண்டியாவை அஜய் தேவ்கன் என்றே கூறுவர். குருனால் பாண்டியாவும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரராவார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2019 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் குருனால் பாண்டியா விளையாடி வருகிறார்.
அஜய் தேவ்கன் நடிப்பில் ‘தே தே பியார் தே’ திரைப்படம் உருவாகியுள்ளது. இது தவிர, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் RRR திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அஜய் தேவ்கன் அறிமுகமாகவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks Krunal.. Ek double role ki film saath mein karte hain! 😜 https://t.co/VS6UP17Gn0
— Ajay Devgn (@ajaydevgn) April 3, 2019