இந்த பாலிவுட் படத்துக்காக ரன்வீர் சிங்குடன் இணைந்த ஜீவா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு முதன் முதலாக உலக கோப்பை வென்றது. இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, '83' என்ற பெயரில் பாலிவுட்டில் ஒரு படம் தயாராகிவருகிறது.

Jiiva shares a picture on instagram with Ranveer Singh for Kapil Dev's Bio pic 83

இந்த படத்தை 'பஜ்ரங்கி பைஜான்', 'ஏக் தா டைகர்' படங்களின் இயக்குநர் கபீர் கான் இயக்க, ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க, நடிகர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

இதற்காக தர்மசாலாவில் 15 நாட்கள் பயிற்சி வகுப்பில் நடிகர்கள் கலந்துகொண்டனர்.   அங்கு  நடிகர்கள் இணைந்து 83 படத்துக்காக தயாராகிவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஜீவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் ரன்வீர் சிங் உட்பட சக நடிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#83film #funwithboys #kabir’11 #dharmshala #cricket #love

A post shared by Actor Jiiva (@actorjiiva) on