அடிச்சது ஜாக்பாட்.. ஐஸ்வர்யா ராய் சாயலில் இருந்த பெண்... அந்த இயக்குனர் படத்தில் ஹீரோயின்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நடித்த நடிகர்களை போல இருப்பவர்கள் பிரபலம் அடைவது வழக்கம். அப்படி பல எடுத்துக்காட்டுகள் நம்மிடையே இருக்கின்றனர். நஸ்ரியா போலவே இருக்கும் வர்ஷா பொல்லம்மா தளபதி விஜய்யுடன் பிகில், விஜய்சேதுபதியுடன் 96 மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா சாயல் பெண் சினிமாவில் அறிமுகம் Aishwarya Rai lookalike tiktok girl to act heroine in movie

தற்போது பெண்ணொருவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். அவரது டிக்டாக் வீடியோக்கள் பெருமளவில் வைரலானது. இந்நிலையில் அவர் யாரென்று தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருந்த நிலையில் அவர் கேரளாவை சேர்ந்த அம்ருதா என்று தெரிய வந்தது. விளம்பர படங்களிலும், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்போது அதிரடியான செய்தி வெளியாகியுள்ளது. அவர் மலையாளத்தில் சுனில் காரியத்துக்கரா இயக்கத்தில் 'பிக்காஸோ' என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். ஒரு சின்ன டிக்டாக் வீடியோ வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதற்கு அம்ருதா ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு.

ஐஸ்வர்யா சாயல் பெண் சினிமாவில் அறிமுகம் Aishwarya Rai lookalike tiktok girl to act heroine in movie

People looking for online information on Aishwarya rai, Amrutha, Tiktok will find this news story useful.