Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

வலிமை அப்டேட்டைத் தொடர்ந்து டாக்டர் அப்டேட் கொடுத்த கலெக்டர்! பாராட்டிய சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு நல்ல தகவல் அல்லது விழிப்புணர்வு கருத்தே ஆனாலும் அதைச் சொல்லும் விதத்தில் தான் அதன் ரீச் இருக்கிறது.

After Valimai Update Collector’s Doctor Update Trending

இதனை நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார் திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன். மிக அணமையில் தான் அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் அப்டேட்டை தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்ததை நினைவூட்டும் விதமாக வலிமை அப்டேட் என பகிர்ந்து, அதில் ஜனநாயகத்தின் வலிமை நம் ஒவ்வொருவரின் வாக்குதான், ஆகவே  2021, ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களியுங்கள் என விழிப்புணர்வு செய்திருந்தார்.

இதேபோல் இப்போது டாக்டர் பட போஸ்டரில் மாஸ்க் அணிந்தபடி சிவகார்த்திகேயன் நிற்கும் புகைப்படத்துடன் முகக்கவசம் அணிந்து வாக்களிக்க வாருங்கள். தவறாமல் வாக்களிப்பது வாக்காளர்களின் கடமை. 100% வாக்களிப்பது இந்தியர்களின் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த சிவகார்த்திகேயனும், “பிரதர் நீங்க வேற லெவல்.  இது ஒரு நல்ல முன்னெடுப்பு. நானும் இணைகிறேன். அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிந்து வாக்களிக்கச் செல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை ரீ-ட்வீட் செய்த விஜயகார்த்திகேயன்,  “அதான் டாக்டரே சொல்லிட்டாரே. மாஸ்க் அணிந்து வாக்களிப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் படத்துக்கு பின்னர் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துவரும் நிலையில், மார்ச் 26-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் படம் தள்ளிப்போவதாக அறிவித்திருந்த கேஜேஆர் ஸ்டுடியோ இப்போது படம் ரமலான் பண்டிகையில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

ALSO READ: 'சரவணா ஸ்டோர்ஸ்' லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான 'மாஸ்' அப்டேட்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

After Valimai Update Collector’s Doctor Update Trending

People looking for online information on Doctor, Sivakarthikeyan will find this news story useful.