Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

தனுஷ் பட ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது... பிரபல அரசியல்வாதியை மணக்க இருக்கிறார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடித்த படம் 'பட்டாஸ்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மெஹ்ரின். இந்நிலையில்   நடிகை மெஹ்ரின் பிர்ஸாடாவுக்கு இந்த வருட இறுதியில் திருமணம் நடைபெறஉள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்தவர் மெஹ்ரின் பிர்ஜாடா. சுசீந்திரன் இயக்கத்தில் தமிழில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் விஜய் தேவர்கொண்டா நடித்த 'Nota' படத்திலும், தனுஷ் நடித்த 'பட்டாஸ்' படத்திலும் நடித்தார் .ஹரியானாவின் காங்கிரஸ் தலைவர் பவ்யா பிஷ்னோய் தான் அவரது காதலர். இவர் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன். மார்ச் 12-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் பிரபல தேசிய நாளிதழ் ஒன்றில் முன்பே கூறியிருந்தார் நடிகை, இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ள கோட்டை ஒன்றில் இந்த விழா நடைபெற்றுள்ளது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.

திருமணத்திற்கு பிறகு மெஹ்ரீனின் படங்களில் தொடர்ந்து நடிப்பாரா என்பது தெரியவில்லை. தற்போது சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா பாட்டியா ஆகியோர் இணைந்து நடிக்கும் 'எப்3' என்ற மிகப்பெரிய படம் இவர் கைவசம் இருக்கிறது. 26 வயதான இந்த நடிகை 2016-ல் 'கிருஷ்ணா காதி வீர பிரேம கதா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 'மகானுபவுடு', 'ராஜா தி கிரேட்', 'F2' போன்ற படங்கள் இவரது மற்ற வெற்றிப் படங்கள். பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் தலா ஒரு படம் நடித்துள்ளார். முன்னாள் மாடல் நடிகையான இவர் சில விளம்பரங்களிலும் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Popular actress got engaged with politician தனுஷ் பட ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது... பிரபல அரசியல்வாதியை மணக்க �

People looking for online information on Mehreen Pirzada will find this news story useful.