Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'சரவணா ஸ்டோர்ஸ்' லெஜெண்ட் சரவணன் படத்தின் ஹீரோயின் இவங்களா?.. வெளியான 'மாஸ்' அப்டேட்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்த அந்த நிறுவன உரிமையாளர் ’லெஜெண்ட்’ சரவணன் தற்போது ஜே.டி.ஜெர்ரி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

urvashi rautela female lead in Legend Saravanan debut movie

இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கும்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ்கள் அண்மையில் வெளியாகியிருந்தன. கருப்பு நிற சட்டை அணிந்த சரவணன் பெசண்ட் நகர் ரவியை புரட்டிப் போட்டு அடிக்கும் மாஸான ஆக்‌ஷன் காட்சிகள் புழுதி பறக்க படமாக்கப்பட்டுள்ளன என்பது அந்த புகைப்படங்களில் இருந்து தெரிகிறது. சரவணனுன் இந்த படத்தில் நடிகை கீதிகா திவாரி, பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் பணியையும் வைரமுத்து, பா.விஜய், சிநேகன் ஆகியோர் பாடல் பணிகளையும் மேற்கொள்வார்கள் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பிரம்மாண்ட படத்தின் நாயகியாக தற்போது பிரபல பாலிவுட் நாயகி Urvashi Rautela (ஊர்வசி ராவ்டேலா) இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: 'சமந்தா உள்ளிட்ட நடிகைகள் நடனம்!'.. விடிய விடிய நடந்த சத்குரு ஈஷா சிவராத்திரி.. வைரல் Photos, வீடியோ!

மேலும் செய்திகள்

urvashi rautela female lead in Legend Saravanan debut movie

People looking for online information on Legend Saravanan, Urvashi Rautela will find this news story useful.