Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

வெளியானது சிவகார்த்திகேயன், அனிருத் மிரட்டும் 'ஓ பேபி'... மாஸ் ரெஸ்பான்ஸ் கொடுத்த ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாக இணைந்த டாக்டர் படத்தின் இரண்டாம் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மேலும் யோகிபாபு, பிக்பாஸ் அர்ச்சனா, குக் வித் கோமாளி தீபா  உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

sivakarthikeyan film doctor second single சிவகார்த்திகேயன் மிரட்டும் 'ஓ பேபி'

அதேபோல் ஹீரோயின் பிரியங்காவுடன் அவர் அடுத்து வரவிருக்கும் 'டான்' படத்திலும் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் டாக்டர் படத்தின் முதல் பாடலான 'செல்லம்மா' கடந்த வருடம் ரிலீசாகி அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இரண்டாம் சிங்கிலான 'ஓ பேபி' பாடல் பற்றிய அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இது கர்நாடக இசை மற்றும் வெஸ்டர்ன் இசை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் பாடல் என்று கூறியிருந்த நிலையில் இந்த பாடல் தற்போது ரிலீசாகி ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

வெளியானது சிவகார்த்திகேயன், அனிருத் மிரட்டும் 'ஓ பேபி'... மாஸ் ரெஸ்பான்ஸ் கொடுத்த ரசிகர்கள்..! வீடியோ

sivakarthikeyan film doctor second single சிவகார்த்திகேயன் மிரட்டும் 'ஓ பேபி'

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.