விஷால் - மிஷ்கின் மோதல் : நாங்க நம்புறோம்.. எங்க கிட்ட வாங்க - மிஷ்கினுக்கு வந்த செம ஆதரவு.!
முகப்பு > சினிமா செய்திகள்துப்பறிவாளன் பட மோதலையடுத்து, பிரபல தயாரிப்பு நிறுவனம் மிஷ்கினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.
![மிஷ்கினுக்கு பட வாய்ப்பு தரும் தயாரிப்பாளர் | After Thupparivalan's Vishal and Mysshkin Controversy, Vels films Ishari Ganesh offers a project for him மிஷ்கினுக்கு பட வாய்ப்பு தரும் தயாரிப்பாளர் | After Thupparivalan's Vishal and Mysshkin Controversy, Vels films Ishari Ganesh offers a project for him](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/after-thupparivalans-vishal-and-mysshkin-controversy-vels-films-ishari-ganesh-offers-a-project-for-him-news-1.jpg)
கடந்த 2017-ல் மிஷ்கின் இயக்கித்தில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். விஷால் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்தில் பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். துப்பறியும் நிபுனராக விஷால் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் துப்பறிவாளன்-2 படத்தில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து, படத்தை விஷாலே இனி டைரக்ட் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில் ஐசரி கனேஷின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தனது ட்விட்டர் பக்கத்தில் மிஷ்கினுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது.
இதுகுறித்த தனது பதிவில், 'மிஷ்கின் சார், நாங்கள் எப்போதும் உங்களையும் உங்கள் ஸ்க்ரிப்டையும் நம்புகிறோம். நீங்கள் ரெடி என்றால், வெல்ஸும் ரெடி' என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மிஷ்கின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், அவரின் அடுத்தப்படம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர்.
#Mysskin Sir, We always believe in you and your script, #Vels is ready when you are ready !!!
- @isharikganesh #DrIshariKGanesh #VelsFilmInternational #KaruppurajaVellairaja https://t.co/SiBKhWa5XW
— Vels Film International (@VelsFilmIntl) March 12, 2020