ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா? அவருக்கே தெரியாது.... ஆனா அடுத்த முதல்வர் நான் தான்: வடிவேலு
முகப்பு > சினிமா செய்திகள்தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் உடன் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து செய்தியாளர்களை நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்த ரஜினி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தா்.
இதில் மூன்று திட்டங்களை வெளிப்படையாக அவர் பேசியிருந்தார். அதில் எனக்கு முதல்வர் ஆக விருப்பம் கிடையாது. நான் கட்சிக்கு மட்டும் தலைவராக இருப்பேன். ஆட்சிக்கு வேறு ஒருவர்தான் தலைவராக இருப்பார். வேறு நல்ல எழுச்சி மிக்க இளைஞர் அல்லது அனுபவம் வாய்ந்த முதியவர் ஒருவரை நாம் முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பேட்டி அவரின் ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சி அளித்தாலும் தனது நிலைப்பாட்டை மிக தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடிவேலு அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா? என்று அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது. யாரும் உறுதியாக கூற முடியாது.
மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் அதை வரவேற்கவேண்டும். கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்ற அவரின் முடிவை வரவேற்கிறேன். அவர் எடுத்த முடிவு சரிதான். என் திட்டப்படி 2021-ல் நான் தான் முதல்வர், கண்டிப்பாக இது நடக்கும்,'' என்று நடிகர் வடிவேல் தனக்கே உரிய பாணியில் கிண்டலாக பேசினார்.