நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. மேலும் பார்த்திபன் மட்டுமே முழு படத்திலும் நடித்திருக்கிறார். வேறு யாரும் நடிக்கவில்லை.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் விவேக் எழுதி, சித் ஸ்ரீராம் பாடிய ஒத்த குளிருதா புள்ள ரசிர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த படம் குறித்து Behindwoods TVக்கு பார்த்திபன் பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''ரசிகர்கள தியேட்டருக்கு அழைத்து வர என்னவெல்லாம் விஷயங்கள் இருக்கு. இப்போ உதாரணமா அஜித் படம் 'நேர்கொண்ட பார்வை' இருக்கு. அதுல அஜித் மட்டும் போதும். அவருடைய வெள்ளமுடி, அந்த ஸ்டைலு, பேசுற தொனி இதுபோதும்.
அந்த படத்துல கதை இருக்கா இல்லையானு கூட நீங்க கவலபடமாட்டீங்க. விஜய் 65, 75னு போட்டா போதும் ஓடி போய் பார்த்துடுவிங்க. விஜய் போதும் அஜித் போதும். ஆனா என் மாதிரியான ஆட்களோட படம் பார்க்குறதுக்கு வேற ஒன்னு வேணும்.
பார்த்திபன் படம்னா வித்தியாசமா ஒன்னும் இருக்கும். 2 மணிநேரம் ஒரு மனுஷன எப்படி பார்க்கிறது என்ற அவநம்பிக்கையை, நம்பிக்கையா மாத்துறதுதுக்கு பின்னாடி கடினமான உழைப்பு இருக்கு''. என்றார்.
''VIJAY, AJITHக்கு அது தேவையில்ல... ஆனா?'' - பார்த்திபன் விளக்கம் வீடியோ