'ஏன் என்னை பிரிந்தாய்?' - துருவ் விக்ரமின் 'ஆதித்யா வர்மா' வீடியோ பாடல் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 23, 2019 11:19 AM
தெலுங்கில் வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள 'ஆதித்யா வர்மா' படத்தை E4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தை கிரீசயா இயக்க, ரதன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பனிட்டா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இருந்து தற்போது 'ஏன் என்னை பிரிந்தாய்' என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாட ரதன் இந்த பாடல்வரிகளை எழுதியுள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
'ஏன் என்னை பிரிந்தாய்?' - துருவ் விக்ரமின் 'ஆதித்யா வர்மா' வீடியோ பாடல் இதோ வீடியோ
Tags : Adithya Varma, Dhruv, Ravi K Chandran