துருவ் விக்ரமின் 'ஆதித்யா வர்மா' படத்தின் முக்கிய அப்டேட் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள 'ஆதித்யா வர்மா' படத்தை E4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

Dhruv Vikram's Adithya Varma Audio and trailer release

இந்த படத்தை கிரீசயா இயக்க, ரதன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பனிட்டா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ஆதித்யா வர்மா திகழ்கிறது. இந்த படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் ட்ரைலர்  வரும் அக்டோபர் 22ம் தேதி வெளியிடப்போவதாக ஆதித்யா வர்மா படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கிரிசாயா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதித்யா வர்மா திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிடா சாந்து நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Watch this space 😌

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on