வீட்டை 'சுத்தம்' பண்ண மாதிரியும் ஆச்சு அப்டியே... 'வீடியோ' வெளியிட்ட நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்சமீபத்தில் நடிகை கத்ரீனா கைஃப் வீட்டை எப்படி சுத்தப்படுத்துவது போன்ற வீடியோவினை வெளியிட்டு அது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அந்த வகையில் தற்போது தெலுங்கு நடிகை அடா ஷர்மா உடற்பயிற்சி செய்து கொண்டே வீட்டை எப்படியெல்லாம் சுத்தப்படுத்தலாம் என்கிற வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உடலை பிட்டாக வைத்துக்கொள்ள நேரம் இல்லை என புலம்பும் பலருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்லலாம். ஆம். இந்த நாட்களில் அதிக நேரம் தூங்காமல் நம் உடலுக்கு தேவையான உடற்பயிற்சியை வீட்டிலிருந்தே செய்து கொள்ளுங்கள்.
அடா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் “அதிகம் பேர் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லை என சொல்கின்றார்கள். வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டே எப்படி உடற்பயிற்சி செய்வது என்பதை நான் கற்றுத்தருகிறேன். அதிக நேரம் போனில் மூழ்கிவிடாமல் இது போன்று வீட்டை சுத்தம் செய்து பாதுகாப்புடன் இருங்கள்” என தெரிவித்துள்ளார்.