எப்டியெல்லாம் யோசிக்கிறாங்கயா.. சுனைனா ரசித்த மீம்... கொரோனாவுக்கு டஃப் கொடுப்பது எப்படி?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவின் தனிமையில் இருந்து தப்பிக்க நடிகை சுனைனா ஷேர் செய்த மீம் Actress Sunaina Shares An Funny Sillukarupatti Meme On Corona Virus

ஆனால் மக்கள் அடைந்து இருக்கும் இந்த நிலையிலும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்கள் இந்த மீம் கிரியேட்டர்கள் தான். உலகமே கொரோனாவை பார்த்து பயப்பட்டாலும், அந்த பயத்தை அடித்து துவம்சம் செய்து விடுகிறார்கள். அப்படி ஒரு மீம் தான் நடிகை சுனைனா ஷேர் செய்திருக்கிறார். அவர் கடைசியாக நடித்த சில்லுக்கருப்பட்டி படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது அந்த படத்தில் அவர் தனது தனிமையை மறக்க அலெக்ஸா கருவியுடன் பேசிக் கொண்டிருப்பார். அது போல நெட்டிசன் ஒருவர் எனக்கு இப்போது தேவையும் ஒரு அலெக்ஸா அம்மு  தான் என்று காமெடியாக கூறியுள்ளார். இதனை சுனைனா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Well... #laughterismedicine

A post shared by Sunainaa (@thesunainaa) on

Entertainment sub editor