போலீஸ்காரர் அழுகிறார்.. ஆனா திருந்தமாட்டோம்ல - மாஸ்டர் நடிகர் ஷாந்தனு கோபம். ஏன் தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பில் அலட்சியமாக இருப்பதற்காக  கோபமாக பதிவிட்டுள்ளார். 

கொரோனா பாதுகாப்பு ஷாந்தனு கோபம் | vijay's master actor actor shanthnu turns angry over negligence in corona safety issu

மூத்த இயக்குநர் கே.பாக்யராஜின் மகன் ஷாந்தனு. சக்கரக்கட்டி, சித்து பிளஸ்-2 உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் பிரபலமானார். அவர் இவர் நடிப்பில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ லான்ச்சில், விஜய்யுடன் இவர் சூப்பர் குத்தாட்டம் போட்டார்.

இந்நிலையில் அவர் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதையடுத்து, சென்னையில் ஒரு போலீஸ்காரர் வெளியில் வருபவர்களிடம், வராதீர்கள் என கையெடுத்து கும்பிட்டு வேண்டிக்கொண்டார். இணையத்தில் ட்ரென்டான இந்த வீடியோவை பகிர்ந்து, ''நாம் ஒரு முட்டாள்கள் என நிருபித்து கொண்டிருக்கிறோம். ஒரு போலீஸ்காரர் நமக்காக அழுவதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. எவ்வளவு சொன்னாலும் நாம் திருந்த மாட்டோம். இப்போது கெஞ்சுவார்கள், பிறகு அடி பிரிப்பார்கள், யாரும் குறை கூற வேண்டாம்' என அவர் பதிவிட்டுள்ளார். 

Entertainment sub editor