www.garudabazaar.com

அரசு விழாவில் நடனமாடி அசத்திய நடிகையும் அமைச்சருமான ரோஜா.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரோஜா.

Actress Roja dancing in Tirupati govt cultural event

Also Read | "இந்த சீரிஸ் இயக்குனர்தான் என்னோட 1st Assistant".. நினைவுகூர்ந்த S.J. சூர்யா!

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரோஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

Actress Roja dancing in Tirupati govt cultural event

ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா,திருப்பதியில் உள்ள மகாதி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ஜெகன்னா ஸ்வர்ணோத்ஸவ விழாவில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா பங்கேற்று மாணவர்களுடன் நடனமாடினார். விழாவில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக  பங்கேற்றார்.

முதல் நாள், பழங்குடியினரின் நாட்டுப்புறப் பாடலுக்கு நடனமாடிய அவர், இரண்டாவது நாள் கொண்டாட்டத்தில்,  மாணவர்களுடன் இணைந்து நடனமாடினார். கலாசாரம் மற்றும் மரபுகளைப் பாதுகாக்க முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் பாடுபட்டு வருகிறார் என இந்நிகழ்வில் ரோஜா பேசினார்.

Also Read | வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்.. டைட்டிலுடன் வெளியான மிரட்டலான First Look Poster!

அரசு விழாவில் நடனமாடி அசத்திய நடிகையும் அமைச்சருமான ரோஜா.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Roja dancing in Tirupati govt cultural event

People looking for online information on Andhra Pradesh minister Roja, Dance, Roja, Tirupati govt cultural event will find this news story useful.