bigg boss 6 tamil : ‘மெட்டி ஒலி’ சாந்தியுடன் ராபர்ட் மாஸ்டர் கலக்கல் டான்ஸ் .. களைகட்டிய பிக்பாஸ் வீடு..!!!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, மாடல் ஷெரினா, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் தன் கதையை ராபர்ட் மாஸ்டர் கூறினார். அதில், “மற்றவர்களைப் போல என் வாழ்விலும் காதல் வந்தது. அந்த பெண் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. 18 வயசுல ஓடிவந்து திருமணம் செய்து கொண்டேன்.. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. ஆனால் குழந்தை பிறந்ததும் மனைவியை பிரிந்தேன். ஏன் பிரிந்தோம் என இன்றுவரை தெரியவில்லை. நான் படிக்கவில்லை என்று அவள் என்னை விட்டு பிரிந்தாள். என் மகளுக்கு இன்றுவரை நான்தான் அப்பா என தெரியுமா? தெரியாதா என்று கூட எனக்கு தெரியவில்லை. என் முதல் மனைவி வேறு திருமணம் செய்து கொண்டார். என் மகளுக்கு நான்தான் அப்பா என நான் செத்து போன பிறகாவது சொல்லுங்கள்.” என்று அவர் குறிப்பிட்டார்.
பின்னர் வெளியே வந்து ஹவுஸ்மேட்களுடன் பேசும்போது, ஒருநாள் தன் மகளை பார்த்துவிட்டதாகவும், அப்போது அவள் தன்னை அங்கிள் என கூப்பிட்டதாகவும், உடன் தன் முதல் மனைவி இருந்ததாகவும் குறிப்பிட்ட ராபர்ட், இப்போது அவளை ஒருவர் நன்றாக பார்த்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன், அதனால் அவர்களை தான் தொந்தரவு செய்யவில்லை என்றும் தெரிவ்வித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியை தன் மகள் பார்ப்பார் என்பதற்காக வந்ததாகவும் ராபர்ட் மாஸ்டர் தழுதழுத்த குரலில் கூறினார்.
இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர் சாந்தியுடன் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார். முன்னணி இயக்குனர்கள் இயக்கிய திரைப்படங்களுக்கும், முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களுக்கும் நடனம் ஆடியுள்ளார் ராபர்ட் மாஸ்டர். இதேபோல், நடன இயக்குநர் சாந்தி 90களில் வெளியான மெட்டி ஒலி சீரியலின் அறிமுக பாடலில் நடனம் ஆடி கவனம் ஈர்த்தவர். அண்மை காலங்களில் சீரியல்களில் நடித்து வந்தவர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டு நடனக் கலைஞர்களும் இணைந்து நடனம் ஆடியுள்ளது பிக்பாஸ் வீட்டை உற்சாகப்படுத்தியுள்ளது.