நடிகை ராஷ்மிகா முதன்முதல் தியேட்டரில் பார்த்தது இந்த படம்தானாம்... தளபதி வெறியன்ஸ் அலர்ட்...!
முகப்பு > சினிமா செய்திகள்கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. இவர் இன்னும் தமிழில் ஒருபடம் கூட நடிக்காத நிலையிலும், தமிழ்நாட்டிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவரைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் உடனே வைரலாகி விடுகிறது. தனது துறுதுறு செயல்களால் ரசிகர்களின் மனதைக் கட்டிப் போட்டவர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது? என்று கேட்க, அதற்கு பதிலளித்த ராஷ்மிகா "நான் முதலில் பார்த்த படம் 'கில்லி'. எனது தந்தை அழைத்து சென்றார். என் தந்தை ஒரு சினிமா பிரியர். ஆனால் நான் நடிகையான பின்பு, ஏனோ அவர் அப்படி இல்லை" என்று கூறியுள்ளார். கில்லி படம் தளபதி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது தல ரசிகர்களுக்கும் மற்ற அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படம். இந்த பதிவை தளபதி வெறியர்கள் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.
Gilli I think. My dad took me. 🐒 I don’t know you should ask him- He was a hugggeee movie buff back in the day. Now when I am an actor he’s not. 🙄😒
— Rashmika Mandanna (@iamRashmika) May 16, 2020