குட்டி ரம்பா.... அப்படியே ஜெராக்ஸ் ! ரம்பாவோட பொண்ணா இது ? - ஃபோட்டோ உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்சூப்பர் ஸ்டாருடன் 'அருணாச்சலம்', கமல்ஹாசனுடன் 'காதலா காதலா', தளபதி விஜய்யுடன் 'நினைத்தேன் வந்தாய்', 'மின்சாரக்கண்ணா'', தல அஜித்துடன் 'ராசி' என தமிழின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரம்பா. 90கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயின்களில் அவரும் ஒருவர்.
இயக்குநர் சுந்தர்.சி - நடிகர் கார்த்திக் கூட்டணியில் அவர் நடித்த காமெடியை மையப்படுத்திய படங்களான 'உள்ளத்தை அள்ளித்தா', 'உனக்காக எல்லாம் உனக்காக' உள்ளிட்ட படங்களை தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கினார்.
இந்நிலையில் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள். இதனையடுத்து அவர் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோ வெளியாகி செம வைரலாகி வருகிறது. அந்த ஃபோட்டோவில் ரம்பாவின் மகள் கிட்டத்தட்ட அவரைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.