சூப்பர்ஸ்டார் நடிகருடன் நடிக்கும் 'ஸ்ருதிஹாசன்'.. அதிரடி 'ஜாக்பாட்'- தல Fans-க்கு 'குட்' நியூஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து முன்னணி நடிகைகளுடன் போட்டி போட்டவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் உலகநாயகன் கமல் ஹாசனின் மகள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இவர் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் இயங்கி வருகிறார்.

அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த 'தேவி' குறும்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. விஜய் சேதுபதியுடன் சந்தித்துள்ள 'லாபம்' படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. தற்போது ஸ்ருதி ஒரு சூப்பர்ஸ்டாருடன் நடிக்க இருக்கிறார்.
ஆம் 'தல' அஜித் நடித்து வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். இந்த படத்தின் ஹீரோவாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கிறார். எச். வினோத் இயக்கத்தில் ஹிந்தி 'பிங்க்' படத்தின் ரீமேக் ஆன 'நேர்கொண்ட பார்வை' தமிழில் ஹிட் ஆனது. இந்நிலையில் தெலுங்கிலும் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் குஷியில் இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.